’கொலையுதிர் காலம்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் நயன்தாராவை இழிவாக பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தொடர்ந்து அவர் நடிகைகளை இழிவாக பேசினால், அவருக்கு நடிக்க தடை விதிக்கப்படும் என்று நடிகர் சங்கம் தெரிவித்திருக்கிறது. அதேபோல், திமுக-வும் அவரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டது.
நடிகைகள் பலர் ராதாரவியை கலாய்க்கும் விதத்தில் சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள்.
இதற்கிடையே, தனது பேச்சுக்கு விளக்கம் அளித்திருக்கும் ராதாரவி, நயன்தாராவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில், சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி, இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ராதாரவி நயன்தாராவை பேசியதை வைத்து இந்த மாதிரியான வார்த்தைகளை நான் ஏற்கமாட்டேன். நேரடியாக சென்று அறைந்துவிடுவேன்.

நயன்தாரா கண்ணியமான பெண், ஆனால் நான் கொடூரமான பெண்.” என்று தெரிவித்திருக்கிறார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...