சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட் படங்களாக உருவாவதுடன், எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களாகவும் தயாராகிறது. அந்த வகையில், சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்து மித்ர, ரவிகுமார், பாண்டிராஜ் ஆகிய இயக்குநர்களிடன் படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் காதல் மற்றும் காமெடி ஜானர் படமாக இருந்தாலும், சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு அழைத்து செல்லும் மிக பிரம்மாண்டமான படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவின் சென்சேஷன் நாயகியான ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...