தெலுங்கு சினிமாவில் ஆரம்பித்த மீ டூ விவகாரம், பாடகி சின்மயின் புகாரால் தமிழ் சினிமாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஸ்ரீ ரெட்டியின் பல புகார்களால் கோடம்பாக்கமே ஆடிப்போனது. இதை தொடர்ந்து நடிகைகள் பலர் மீ டூ பற்றி தங்களது கருத்துக்களை கூறியதோடு, சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது உண்மை, தான் என்றும் ஒப்புக் கொண்டார்கள்.
தற்போது, மீ டூ விவகாரம் பற்றி நடிகைகள் யாரும் பேசாமல் இருக்கும் நிலையில், பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகையான, கராத்தே கல்யாணி, பிரபல நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதற்காக ரூ.50 ஆயிரம் தருவதாகவும் கூறினார், என்று புகார் கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து கூறிய கராத்தே கல்யாணி, “இது சினிமாவில் மட்டுமல்ல. பல துறைகளில் இருக்கிறது. ஐடி கம்பெனிகளில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது எல்லாம் பெரிய விசயமில்லை. சினிமாவில் ஆரம்பத்தில் நானும் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டேன்.

ஒப்பந்தத்துடன் அதையும் சேர்த்து தான் பேசுகிறார்கள், அதற்காக எனக்கு ரூ.50 ஆயிரம் தருவதாக ஒரு பிரபல நடிகர் கூறினார். ஆனால், நான் அதை அனுமதிக்கவில்லை. இதனால், என்னை வீட்டை விட்டு காலி செய்யும்படி செய்துவிட்டார்கள்.
நாம் மனதளவில் மிகவும் தைரியமாக இருந்தால், யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நாம் எப்படி நம்மை வெளிப்படுத்துகிறோம், என்பதில் தான் ஒவ்வொரு விசயமும் இருக்கிறது. அதனால் தான் நான் சினிமாவில் இந்த உயரத்திற்கு வந்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...