Latest News :

’ஐரா’ இயக்குநரை புகழும் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி!
Tuesday March-26 2019

நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை, சர்ஜூன் இயக்கியிருக்கிறார். வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி, இயக்குநர் சர்ஜூனை புகழ்ந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி தனக்கும், இயக்குநர் சர்ஜூனுக்கும் இடையிலான நட்பு குறித்து கூறுகையில், ”என் மீது இந்த அளவு நம்பிக்கையை அவர் வைக்காமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. லக்ஷ்மி மற்றும் மா போன்ற குறும்படங்களை எடுத்த நாட்களில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எனக்கும் சர்ஜூனுக்கும் இடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்ற ஒரு பரிசு. அது தான் எங்களை கலையில் புதிய விஷயங்களை செய்ய உதவுகிறது. எப்போது, நாங்கள் கதையை பற்றி விவாதித்தாலும் நான் உடனடியாக சில இசைக் குறிப்புகளை வாசித்து காட்டுவேன். சம்பந்தப்பட்ட காட்சிகளை படம்பிடிக்கும் போது அது அவர் மனதில் ஓடும். எங்கள் நட்பின் ரகசியம் என்னவென்று பலரும் கேட்கிறார்கள். நிச்சயமாக, அது சர்ஜுன் எனக்கு வழங்கும் நம்பிக்கை மற்றும் சுதந்திரம் தான். அதுவே தனித்துவமாக சிந்திக்க எனக்கு உதவுகிறது. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் விருப்பமான இயக்குநர் ஒருவர் இருப்பார். அவருடன் பணிபுரியும் போது இசை மிகவும் சிறப்பாக அமையும். அது போன்ற அனுபவங்கள் ஒருவரின் திரை வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் நடப்பது என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம். அந்த வகையில் என் இசை பயணத்தின் ஒரு பகுதியாக சர்ஜூன் எனக்கு கிடைத்ததை நான் வரமாக உணர்கிறேன்.” என்றார்.

 

கே.எஸ். சுந்தரமூர்த்தி இயல்பிலேயே சினிமா மற்றும் கலை தாகம் உடையவர். அவரது தந்தை ஒரு டிசைனர். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் பணியாற்றிய அவரது படைப்புகள் மிகவும் கவனிக்கப்பட்டன. தனது குழந்தை பருவத்தில் இருந்து இசை திறமைகளை ஒருங்கே பெற்ற இந்த இளம் இசையமைப்பாளர் கலை மற்றும் வணிக ரீதியான படங்களுக்கும் இசையமைக்க விரும்புகிறார். 


Related News

4454

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
Monday December-22 2025

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...

சென்னையைக் கவர்ந்த டொயோட்டாவின் ’டிரம் டாவோ’ இசை நிகழ்ச்சி!
Monday December-22 2025

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...

Recent Gallery