சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிக்கும் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நெடுவாசல் போராட்டங்களுக்கு ஆதரவாக, துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததாகவும், போராட்டத்துக்கு துாண்டியதாகவும், வளர்மதியை போலீசார் கைது செய்தனர். பின், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை, சேலம் போலீஸ் கமிஷனர், ஜூலை, 17 ஆம் தேதி பிறப்பித்தார். இதனை எதிர்த்து அவரது தந்தை மாதையன் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், ”வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...