சினிமாவில் 65 ஆண்டுகளை கடந்த பாடகி சுசீலாவுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா!
Wednesday March-27 2019

தேன் சிந்தும் குரலால் வான் எட்டும் புகழைப் பெற்ற கானகுயில் பாடகி சுசீலா. தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்மொழியில்தான் அவர் உயிர்க்குரல் உயரம் தொட்டது. இன்று சிட்டுக்குருவிகள் அழிந்து போனாலும் அவர் பாடிய 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து' பாடலும் பாடலில் அவர் காட்டிய மேஜிக் குரலும் ஒருக்காலும் அழியாது. 

 

1953 -ல் “பெற்றதாய்” படத்தில் பாடகியாக அறிமுகமான அவர் ”மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...”, ”தமிழுக்கு அமுதென்று பேர்....” போன்ற மறக்க முடியாத பாடல்கள் உள்பட இந்திய மொழிகளில் மொத்தம் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களுக்கான அங்கீகாரமாக பத்மபூசன் விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. மேலும் 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

 

சினிமாவிற்கு வந்து 65 வருடங்களை கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84. ஆனால் இன்னும் குன்றாத இளமையுடன் இருக்கிறது அவரது புகழும், அவரின் தமிழும். அப்படிப்பட்ட சாதனைப் பாடகி சுசீலா அவர்களுக்கு லயா மீடியா சார்பாக அவரின் அதி தீவிர ரசிகரான வீரசேகர் மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்த இருக்கிறார்.இவர் ஏற்கெனவே ஹாரிஸ் ஜெயராஜுவிற்கு ஒரு பிரம்மாண்ட விழாவை நடத்தி இருக்கிறார். 

 

பொதுவாக ரசிகர்கள் கைதட்டுவார்கள் சில பேர் பால் அபிஷேகம் செய்வார்கள் ஆனால் இவரோ பாராட்டு விழா நடத்துகிறார் என்றால் சுசீலா அவர்களின் புகழ் வானுயர்ந்ததே.

 

‘சுசீலா 65’ என்ற தலைப்பில் நடைபெற இருக்கும் இந்த பாராட்டு விழா, வரும் மே மாதம் 19-ஆம் தேதியன்று சென்னை பல்கலைகழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறுகிறது.

 

இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும், பெரும் ஆளுமைகள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இசை பேரரசிக்கு மகுடம் சூட்டும் இந்த விழா ரசிகர்களின் வருகையாலும், வாழ்த்துகளாலும் மாபெரும் இசை திருவிழாவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Related News

4463

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery