விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்கியா’ வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார்.
ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. 50 நாட்கள் தொடர்ந்து துருக்கியில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்ட படக்குழு, சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சென்றது.
இந்த நிலையில், துருக்கி மலைப்பகுதியில் விஷால் பங்குபெற்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் காரில் செல்லும் வில்லன்களை, விஷால் பைக் மூலம் சேசிங் செய்ய வேண்டும். அதன்படி வில்லன்களை பைக்கில் துரத்திய விஷால், கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்து எலும்பு முறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
இருப்பினும், கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதன் காரணமாக, விஷால் மருத்துவமனையில் சில நாட்கள் ஓய்வில் இருக்க முடிவு செய்திருக்கிறார். இதனால், படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...