தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு ”அஜித் அரசியலுக்கு வர வேண்டும், தலைமை ஏற்க வா தலைவா” என்று சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று அஜித் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகும் அவரை சுசீந்திரன் அரசியலுக்கு அழைத்தது பெரும் சர்ச்சையானதோடு, பலர் அவரை விமர்சனம் செய்தார்கள். ஏன், அஜித் ரசிகர்கள் கூட சுசீந்திரனை கழுவி கழுவி ஊற்றினார்கள்.
இந்த நிலையில், அஜித்தை தான் ஏன் அரசியலுக்கு அழைத்தேன், என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள சுசீந்திரன், “அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார்” என்று கூறி மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து சுசீந்திரன் கூறுகையில், “மக்களுக்கு யாரால் நல்லது நடந்தாலும் நான் வரவேற்க தயார். நான் மற்றவர்கள் பற்றி பேசவில்லை. அஜித் நிச்சயம் அரசியலுக்கு வருவார். இல்லை ஒரு அரசியல் மாற்றத்திற்கு அவர் காரணமாக இருப்பார்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன், தொடர்ந்து அஜித்தை அரசியலுக்கு அழைப்பதால், அவர் மீது அஜித் ரசிகர்களுடன் சேர்த்து விஜய் ரசிகர்களும் கோபத்தில் உள்ளார்கள்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...