ரஜினி - கமல் என இரண்டு முன்னணி நடிகர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவை விஜய் - அஜித் ஆகிய இருவர் ஆட்கொண்டிருந்தாலும், இவர்களுடன் மேலும் சில நடிகர்களும் ரசிகர்களை கவர்ந்து வசூல் மன்னர்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில், தற்போது விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் இருவரும் தங்களது படங்கள் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்து வருவதோடு, வியாபார ரீதியாகவும் பல வெற்றிகளை கொடுத்து வருகிறார்கள்.
சிவகார்த்திகேயனுக்கும், தனக்கும் இடையே போட்டியெல்லாம் இல்லை, அவர் என்னை விட பெரிய இடத்தில் இருக்கிறார், என்று விஜய் சேதுபதி பெருந்தன்மையோடு சொல்வதை போல, சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியின் நடிப்பை அவ்வபோது பாராட்டி தங்களது நட்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதிக்காக சிவகார்த்திகேயனை நடிகை ஒருவர் நிராகரித்ததாக தகவல் வெளியாகி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்திருந்த ‘கனா’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், அப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். அவருக்கு பல படங்களின் வாய்ப்புகள் வருவது போல, கமர்ஷியல் ஹீரோயினாக கலக்கக்கூடிய வாய்ப்புகளும் வருகிறதாம்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் ஹீரோயினாக நடிக்க இருந்ததாம். ஆனால், திடீரென்று ஐஸ்வர்யா ராஜேஷ், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் தேதி பிரச்சினை என்று ஐஸ்வர்யா தரப்பில் கூறப்படுகிறதாம். ஆனால், உண்மையான் காரணம், விஜய் சேதுபதி, என்று தகவல் வெளியாகியுள்ளது.
’ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’ என விஜய் சேதுபதியுடன் மூன்று படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது நான்காவது முறையாக அவருடன் ஜோடி சேரப்போகிறாராம். அதற்கான வாய்ப்பை விஜய் சேதுபதியே அவருக்கு வழங்க, உடனே அதை ஏற்றுக்கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் படத்தை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...