இறுதிக்கட்டத்தை எட்டிய விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’!
Friday March-29 2019

விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ‘தமிழரசன்’. மிகப்பெரிய பொருட்செலவில் எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார்.

 

சுரேஷ் கோபி, சோனு சூட், சங்கீதா, கஸ்தூரி, ராதாரவி, ரோபோ சங்கர்,  சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், செண்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஷ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

 

இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, பழனிபாரதி, ஜெய்ராம் பாடல்கள் எழுதியுள்ளார்கள். அனல் அரசு ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்க, பிருந்தா, சதீஷ் ஆகியோர் நடம் அமைக்கின்றனர்.

 

ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டு கட்டப்படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு துவங்க உள்ளது. அத்துடன், படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து பின்னணி வேலைகளில் படக்குழு ஈடுபட உள்ளது.

Related News

4476

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery