சினிமா படப்பிடிப்புகளில் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும் போது மிகவும் பாதுக்காப்பான முறையில் படமாக்குவார்கள். சில நேரங்களில் அதையும் மீறி விபத்துகள் நிகழ்வதுண்டு. அந்த வகையில், பிரபல நடிகரின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் தாய் மற்றும் மகள் என்று இரண்டு பெண்கள் உயிரிழந்த் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னடத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மகன் ஆவார். இவர் நடித்து வரும் ‘ரணம்’ படத்தின் படப்பிடிப்பில், கார் வெடித்து சிதறுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சிலிண்டர் மூலம் கார் வெடிக்க வைக்கப்பட்ட போது, அதன் பாகங்கள் பறந்து சென்று அருகே இருந்த ஒரு குடியிருப்பில் விழுந்துள்ளது. இதில், அந்த வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த அந்த சிறுமிக்கு 8 வயது.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு ஆபத்தான காட்சியை படமாக்கும் போது, போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையிடம் முறையாக பெற வேண்டிய அனுமதியையும் படக்குழு பெறவில்லை, என்பதால் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவல் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்ததா, இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...