தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டும் இன்றி, நடிப்புக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக இருப்பவர் விக்ரம். கதாபாத்திரத்திற்கான மெனக்கெடும் இவர், அதற்காகவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படத்தில் நடித்த கதையும் உண்டு.
இப்படி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் விக்ரம், இனி கமர்ஷியலாக ஆண்டு மூன்று படங்களில் நடிக்க முடிவு செய்த நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்க தொடங்கினார். அப்படம் தொடங்கி சில ஆண்டுகள் ஆனாலும் இதுவரை படம் முடிந்தபாடில்லை. இதற்கிடையே, ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தில் நடித்து முடித்த விக்ரம், அடுத்தடுத்து வேறு படங்களில் நடிக்க தொடங்கினாலும், ‘துருவ நட்சத்திரம்’ எப்போது வெளியாகும் என்பது அவருக்கோ அல்லது இயக்குநர் கெளதம் மேனனுக்கோ புரியாத புதிராக இருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘விஸ்வாசம்’ படத்தில் உள்ள சில காட்சிகளைப் போல துருவ நட்சத்திரம் படத்திலும் இருக்கிறதாம். இதனால், பெரும் குழப்பமடைந்திருக்கும் கெளதம் மேனன், அக்காட்சிகளை நீக்கிவிட்டு ரீ சூட் செய்யலாமா, என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
ஏற்கனவே, படம் வெளியாகவில்லை என்ற கவலையில் விக்ரம் இருக்க, தற்போது அஜித் படத்தின் மூலம் அவரது படத்திற்கு வந்திருக்கும் புது சிக்கலால், மனுஷன் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...