தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த உடனே குடும்ப பிரச்சினை காரணமாக, கோடம்பாக்கத்தை விட்டு வெளியேறிய அஞ்சலி, தெலுங்கு தேசத்தில் தஞ்சம் அடைந்ததோடு, அங்கே நடிகர் ஒருவரது கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்பட்டது.
பிறகு குடும்ப பிரச்சினைகள் தீர்ந்த நிலையில், மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியவர், தற்போது ஏராளமான பட வாய்ப்புகளுடன் மீண்டும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, அவ்வபோது அஞ்சலி குறித்து காதல் கிசிகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அவர் நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும், இருவரும் திருமண்ம் செய்துக் கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு ஜெய் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், அஞ்சலியையும் அவர் மதம் மாற சொல்வதாகவும், இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அஞ்சலி - ஜெய் தற்போது சமாதானமாகிவிட்டதோடு, விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருமணத்திற்குப் பிறகு அஞ்சலி நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதை மறுத்திருக்கும் அஞ்சலி, திருமணம் என்ற தகவல் பொய்யானது, அப்படியே திருமணம் செய்துக் கொண்டாலும் நடிப்பை தொடர்வேன், நிறுத்த மாட்டேன், என்று கூறியுள்ளார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...