‘களவாணி’ படத்தில் வில்லனாக நடித்தவர் திருமுருகன். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், இவரை சற்குணம் நடிகராக மாற்றிவிட்டார்.
‘களவாணி’ படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டதை தொடர்ந்து, ‘அரவாண்’, ‘என்னமோ நடக்குது’, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘ 49 ஓ’, ‘ஈட்டி’, ‘பென்சில்’, ‘கட்டப்பாவ காணோம்’ உள்பட பல படங்களில் நடித்து வந்தவர், தற்போது ‘ஓணான்’, ‘அடங்காதே’, ‘டார்ச்லைட்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
திருமுருகனுக்கும், அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும், நேற்று (செப்.04) திருமணம் நடைபெற்றது. தஞ்சை அருகே உள்ள பாப்பாநாடு கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இயக்குநர் பாரதிராஜா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். மற்றும், இயக்குநர் சற்குணம், நடிகர் விமல் உள்ளிட்ட திரையுல பிரபலங்கள் பலர் இந்த திருமண விழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
மணப்பெண் மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...