இயக்குநர் சேரன் இயக்கி, நடித்து கடந்த மார்ச் மாத துவக்கத்தில் வெளியான ’திருமணம்’ திரைபப்டம் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி மறு வெளியீடாக, மீண்டும் ரிலீஸாகிறது.
உமாபதி ராமையா ஹீரோவாகவும், காவ்யா சுரேஷ் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் சேரன், முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுகன்யா, தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதை களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை.
பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான ஒத்துழைப்போடும்,
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...