’சர்கார்’, ‘மாரி 2’ ஆகிய படங்களை தொடர்ந்து வரலட்சுமி நடிப்பில் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகியப் படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் வரலட்சுமி பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது ‘ரணம்’ என்ற கன்னடப் படத்தில் சிபிஐ கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து வருகிறார். வி.சமுத்ரா என்பவர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக நடிகர் அர்ஜுனின் சகோதரின் மகன் சிரஞ்சீவி சர்ஜூன் நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பெங்களூருக்கு அருகிலுள்ள பாகலூரில் படமாக்கப்பட்டது. அக்காட்சியில் இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்று காட்சியமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் அருகில் வைத்திருந்த கேஸ் சிலிண்டரில் தீப்பற்றி வெடித்து சிதறியது.
அதனால் வேடிக்கை பார்க்க வந்த ஐந்து வயது சிறுமியும் அவரது அம்மாவும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் இருவர் உயிரிழந்த சம்பவத்தால் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...