பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். ஏற்கெனவே அமைதிப்படை 2, கங்காரு படங்களை இயக்கியவர்.
"இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம்.
இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, பாடலாசிரியராக மாறிவிட்டார் இயக்குநர் சேரன். அவராகவே முன்வந்து ஒரு பாடலை எழுதிவிட்டார். 'பெண்ணிற்கோர் தீமை செய்தோம்...' எனத் தொடங்கும் அந்தப் பாடலை இஷான் தேவ் இசையமைத்துப் பாடியுள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள ஒரே பாடல் இதுதான். மிகச் சிறப்பாக அமைந்துள்ளது...", என்கிறார் சுரேஷ் காமாட்சி.
சேரன் எழுதிய இந்தப் பாடலை சமீபத்தில் தான் யுட்யூபில் வெளியிட்டு வாழ்த்தினார் இயக்குநர் ராம். அந்தப் பாடலுக்கு சமூக வலைத் தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மிக மிக அவசரம் படத்தில் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ஹரீஷ் நடித்துள்ளார். வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஈ ராமதாஸ், வீகே சுந்தர், சக்தி சரவணன், அரவிந்த், குணா, வெற்றிக்குமரன், சாமுண்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதை வசனத்தை இயக்குநர் ஜெகன்நாத் எழுத, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்ஸன் எடிட்டிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு எஸ் ஷங்கர்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...