கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் காதலர் தினமான பிப்ரவரி 14, 2019 அன்று வெளியான 'தேவ்' படத்தில் கார்த்தி, BMW பைக்கை ஓட்டிக்கொண்டு வருவார். அந்த பைக்கை வெல்வதற்காக சில கேள்விகள் அடங்கிய போட்டியில் - நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்திலோ அல்லது நண்பர்களோ சிறப்பானவர்களாக இருந்தால் 8 லட்சம் மதிப்புள்ள BMW சூப்பர் பைக்கை வெல்லலாம் என்று கூறியிருந்தார்கள்.
இது தவிர 'தேவ்' படத்தைப் பற்றி சில கேள்விகளுக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிலளிக்க வேண்டும்.
சிறந்த பதிலளித்த நவீன் குமார் மற்றும் அபர்ணா இருவரும் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் தலா 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதியதாக பதிவு செய்யப்பட்ட BMW பைக்கை நடிகர் கார்த்தி பரிசாக வழங்கினார்.
'தேவ்' படத்தை புதுமுக இயக்குநர் ரஜாத் ரவிசங்கர் இயக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ்-ன் எஸ்.லக்ஷ்மன் தயாரித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன், அம்ரிதா, RJ விக்னேஷ்காந்த் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...