பிரபல இயக்குநர் மகேந்திரன் மரணம்!
Tuesday April-02 2019

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மகேந்திரன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

 

1966 ஆம் ஆண்டு வெளியான ‘நாம் மூவர்’ படத்திற்கு வசனம் எழுதி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மகேந்திரன், தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்த நிலையில், 1978 ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ படம் இயக்குநராக அறிமுகமானர். அப்படத்தை தொடர்ந்து ’உதிரிப்பூக்கள்’, ‘ரிஷிமூலம்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘மெட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இறுதியாக 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு பஞ்சாயத்து’ படம் தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘காமராஜ்’ படம் மூலம் நடிகராக சினிமாவில் பயணிக்க தொடங்கினார்.

 

விஜயின் ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர், தொடர்ந்து ’நிமிர்’, ‘மிஸ்டர்.சந்திரமெளலி’, ‘சீதக்காதி’, ‘பேட்ட’, ‘பூமராங்’ ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

 

இதற்கிடையே, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மகேந்திரனின், வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக அவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.

 

இந்த நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பு இயக்குநர் மகேந்திரன் அவரது வீட்டில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணிக்கு வைக்கப்படுகிறது. இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மகேந்திரனுக்கு ஜான் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

Related News

4498

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery