பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோயின், பெரிய இயக்குநர் என்று சிவகார்த்திகேயனின் தற்போதைய படங்கள் தாராளமாக தயாராகிக் கொண்டிருக்க, அதே சமயம் பிரச்சினையும் இப்படத்திற்கு பெரிய அளவில் உருவெடுத்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இம்மாதம் 29 ஆம் தேதி வெளியாக இருந்த படம், சிலபல வேலைகள் பெண்டிங் இருப்பதால் குறித்த தேதியில் வெளியாவது கஷ்ட்டம் தான் என்று கூறப்படுகிறது. அதே சமயம் தீபாவளிக்கு வெளியாக உள்ள மெர்சலுக்கு போட்டியாக வேலைக்காரனை வெளியிட்டு சிவகார்த்திகேயனின் வெயிட்டை காட்டும் ஒரு பிளானில் தயாரிப்பு தரப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரங்கள் ஒரு பக்கம் இருக்க, தற்போது ‘வேலைக்காரன்’ படத்தின் கதை தொடர்பாக புதிய பிரச்சினை ஒன்று உருவாகியிருக்கிறது.
கள்வணின் காதலி, மச்சக்காரன், நந்தி ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் என்பவர், இயக்குநர் சங்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்திற்கு எதிராக புகார் ஒன்றை கொடுத்திருக்கிறாரம். அதில், விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘வேலைக்காரன்’ என்னுடைய கதையை திருடி எடுத்திருப்பதாக அறிகிறேன். எனவே, இந்த பிரச்சினையில் சங்கம் தலையிட்டு எனக்கு உரிய இழப்பீடு வாங்கித்தர வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
பொதுவாக, படம் வெளியான பிறகு தான், கதை திருட்டு குறித்து புகார்களும், பிரச்சினைகளும் வருவது வழக்கம். ஆனால், படம் வெளியாவதற்கு முன்பாகவே தன்னுடைய கதையை திருடி படம் எடுத்து விட்டார்கள் என்று தமிழ்வாணன் புகார் அளித்திருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது, பெப்ஸி மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தையில் இயக்குநர்கள் சங்கம் பங்கேற்று வருவதால், இந்த பிரச்சினை சில நாட்களுக்கு பிறகு சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...