கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க பலர் முயற்சித்து வந்த நிலையில், இன்று வரை அது நடக்காமல் உள்ளது. கடந்த சில் ஆண்டுகளுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம், பொன்னியில் செல்வன் நாவலை படமாக்க முடிவு செய்து, அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளில் ஈடுபட்டார். ஆனால், மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்பதால் அந்த முயற்சியை அப்போது அவர் கைவிட்டுவிட்டார்.
இதற்கிடையே, மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தை துவங்கியிருக்கும் மணிரத்னம், தற்போது நடிகர், நடிகைகள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், மோகன்பாபு, ஜெயம் ரவி, விக்ரம், கீர்த்தி சுரேஷ், கார்த்தி ஆகியோர் நடிக்க ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைகா நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்திருப்பதாகவும், லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் முடிந்த பிறகு, ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கிய ‘செக்கச் சிவந்த வானம்’ வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...