மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளராக இருக்கிறார். ஸ்ரீதேவி மறைவின் போது, போனி கபூர் மீது சிலர், சில குற்றச்சாட்டுகளை கூறியதால், சர்ச்சைகளில் சிக்கினார். அதன் பிறகு சர்ச்சைகளில் இருந்து வெளியே வந்தவர், தற்போது படங்கள் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
தற்போது, தமிழ்ப் படங்கள் தயாரிப்பதில் ஈடுபாடு காட்டி வரும் போனி கபூர், அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்து வருவதோடு, அஜித்தின் அடுத்தப் படத்தையும் தயாரிக்கிறார்.
இந்த நிலையில், போனி கபூர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருமண விழா ஒன்றில் கலந்துக் கொண்ட போனி கப்பூர், பிரபல நடிகை ஊர்வசியை தகாத முறையில் தொட்டதாக கூறி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்துவிட்டு பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவால் போனி கப்பூருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே சமயம், சம்மந்தப்பட்ட நடிகை ஊர்வசி, இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், போனி கபூர் ஜெண்டில்மேன், அவரை ட்ரோல் செய்யாதீர்கள், அவரை நான் ஆதரிக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...