சிவா - அஜித் கூட்டணியின் மூன்றாவது படமான ‘விவேகம்’ படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், படத்தில் வசூலில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டதுடன், ரூ.100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் விவேகம், தற்போது முதல் இடத்தில் உள்ளதோடு, ‘பாகுபலி 2’ சாதனையை முறியடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
’விவேகம்’ வெளியான இரண்டு வாரங்களில் சென்னையில் மட்டும் ரூ.8.57 கோடி வசூலித்துள்ளது. ‘பாகுபலி 2’ இதே காலக்கட்டத்தில் ரூ.8.25 கோடி மட்டுமே வசூலித்திருந்தது.
இந்த நிலையில், அஜித் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிவாவுக்கே கொடுப்பதாக கூறியுள்ளாரம். ஆனால், சிவாவுக்கு இதில் உடன்பாடில்லை என்றும் அவர் வேறு ஒரு நடிகரை இயக்க ஆசைப்படுவதாகவும் கூறப்படுகிறது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...