‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். ‘பிங்க்’ இந்தி படத்தின் ரீமேக்கான இப்படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.
இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் பின்னணி வேலைகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.
மேலும், படத்தின் 2 வது லுக் போஸ்டரையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...