சன் பிக்சர்ஸ் தயாரிப்பி, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் ‘முனி 4 காஞ்சனா 3’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரிக்க செய்திருக்கிறது.
முனி மற்றும் முனி வரிசைப் படங்களான ‘காஞ்சனா’ ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதன் தொடர்சியான ‘காஞ்சனா 3’ மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாரர் படங்களில் காமெடியும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியதோடு, அதை தமிழ் சினிமாவின் நீண்டகால டிரெண்டாகவும் மாற்றியது லாரன்ஸின் காஞ்சனா தான், என்பது அனைவரும் அறிந்தது தான். இம்மாதம் வெளியாக உள்ள ‘காஞ்சனா 3’ அதன் முந்தைய பாகங்களை விட மிரட்டலாகவும், அதே சமயம் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பினருக்கு ஏற்ற கமர்ஷியல் படமாகவும் உருவாகியுள்ளதாம்.
இந்த நிலையில், ’காஞ்சனா 3’ படத்தின் டிரைலரை பார்த்த கலாநிதி மாறன், ராகவா லாரன்ஸை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...