நடன இயக்குநாகவும், நடிகராகவும் இருந்த லாரன்ஸ் ‘முனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியால் தொடர்ந்து ‘காஞ்சனா (முனி 2) படத்தை இயக்கி நடித்தவர், தொடர்ந்து முனி 3 பாகத்தை ‘காஞ்சனா 2’ என்ற தலைப்பில் எடுத்து வெற்றி பெற்றார்.
பிறகு திகில் படத்தை தவிர்த்துவிட்டு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ என்று மாஸ் கமர்ஷியல் படத்தில் நடித்த லாரன்ஸ் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தார். இதையடுத்து மீண்டும் திகில் படம் ஒன்றை இயக்கி நடிக்கும் பணியில் இறங்கியுள்ளவர், இப்படத்தை முனி 4 ஆகவும் ‘காஞ்சனா 3’ பாகமாகவும் எடுக்க உள்ளார்.
மேலும், இப்படத்தில் முனி படத்தில் நடித்த நடிகர் நடிகளை நடிக்க வைக்க உள்ளாராம். அதன்படி முனி படத்தில் ஹீரோயினாக நடித்த வேதிகா, இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...