தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள் என்று அனைத்து தரப்பிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆக்ஷன், நடனம், காமெடி, நடிப்பு என்று அனைத்து ஏரியாவிலும் ரசிகர்களை கவர்வதால் விஜய்க்கு பெண்கள் ரசிகர்களும் அதிகம். அதேபோல், விஜயுடன் நடிக்க பல நடிகைகள் விரும்புகிறார்கள்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகை ரைசா விஜயுடன் நடிக்க விரும்புவதாக கூறியதோடு, விஜயை திருமணம் செய்துகொள்ளவும் விருப்பம், என்று கூறினார். இதேபோல், கீர்த்தி சுரேஷ், தான் நடிகையாவது முன்பாக விஜயை பார்க்க பல முறை முயற்சித்திருப்பதாகவும், அவரது தீவிர ரசிகையாக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சுமா மோகன், தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜயுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும், என்ற தனது ஆசையை தெரிவித்திருக்கிறார்.

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...