Latest News :

மூத்த நடிகரின் மனைவி மீது செக்ஸ் புகார் அளித்த இளம் நடிகர்! - அதிர்ச்சியில் திரையுலகம்
Saturday April-06 2019

நடிகர் மற்றும் நடிகைகள் சர்ச்சையில் சிக்குவதோடு, அவர்களது குடும்பத்தாரும் அவ்வபோது சில சர்ச்சைகளில் சிக்கி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்கிறார்கள். 

 

அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் நடைபெற்றிருக்கும் சம்பவத்தால், ஒட்டு மொத்த தெலுங்கு திரையுலகமும், அரசியல் ஏரியாவும் பெரும் அதிர்ச்சியில் உரைந்திருக்கிறது.

 

மறைந்த பழம் பெரும் தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவியான லட்சுமி பார்வதி மீது வாலிபர் ஒருவர் செக்ஸ் புகார் கூறியதோடு, அவர் அனுப்பியதாக சில ஆபாச பட வீடியோக்களையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

 

Lakshmi Parvathy

 

எழுத்தாளரான லட்சுமி பார்வதி, என்.டி.ராமாராவின் முதல் மனைவி இறந்த பிறகு அவரை 1933 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டவர், அவரது மறைவுக்கு பிறகு, தெலுங்கு தேசம் கட்சி சந்திரபாபு நாயுடு வசம் சென்றதால், என்.டி.ஆர் தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கி சிறிது காலம் நடத்தி வந்தவர், பிறகு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

 

இந்த நிலையில், நடிகரும், சமூக சேவகருமான கோட்டி என்ற ஆனந்த் பால் என்பவர், லட்சுமி பார்வதி மீது வினுகொண்டா போலீஸ் நிலையத்தில் செக்ஸ் புகார் அளித்துள்ளார். 

 

NTR and Lakshmi Parvathy

 

அந்த புகாரில், “எனக்கு லட்சுமி பார்வதியை கடந்த 4 ஆண்டுகளாக தெரியும். அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தேன். கடந்த 18 மாதங்களாக அவர் என்னை காதலிப்பதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல்கள் அனுப்பி வருகிறார். அவர் ஆபாச படங்களுக்கான இணையதள தொடர்புகளையும், படங்களையும் அனுப்பி வருகிறார். பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார்.

 

அவரது ஆசைக்கு இணங்கி நடந்தால், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் நல்ல பதவி பெற்றுத்தருவதாகவும் கூறினார்.

 

நான் லட்சுமி பார்வதியை அம்மா போலத்தான் கருதினேன். ஆனால் அவரோ முறையற்ற வீடியோக்களை எனக்கு அனுப்புகிறார். இது எனது குடும்ப வாழ்க்கையில் இடையூறாக அமைந்துள்ளது. அவரது விருப்பத்துக்கு நான் அடிபணியாததால், அவர் என்மீது கோபம் கொண்டுள்ளார். நான் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டுகிறார்.

 

எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் தொல்லை செய்ததற்காக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Lakshmi Parvathy and Kotti

 

இந்த புகாருடன் லட்சுமி பார்வதி அனுப்பியதாக, சில ஆபாச படங்களையும், செல்போன் ஸ்க்ரீன் ஷாட்களையும் அவர் போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறாராம்.

 

புகாரை பெற்றுக் கொண்டா போலீசார், சட்ட ஆலோசனை பெற்ற பிறகு, ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அதன் பிறகே வழக்கு பதிவு செய்வோம், என்று கூறியுள்ளனர்.

 

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், லட்சுமி பார்வதி மீது நடிகர் ஒருவர் கூறியிருக்கும் செக்ஸ் புகாரால், தெலுங்கு சினிமாத் துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதே சமயம், இந்த புகார் குறித்து இதுவரை லட்சுமி பார்வதி, எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

4536

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது
Monday August-18 2025

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

Recent Gallery