தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கிருஷ்ணா, தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தயாரித்திருக்கும் முதல் படத்தில் பிரபல் நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பல முன்னணி நட்சட்திரங்கள் நடிப்பில், புஷ்பா இக்னாஷியஸ் வெப் சீரிஸாக உருவாகியிருக்கும் இப்படம் குறித்து நடிகர் கிருஷ்ணா கூறுகையில், “நான் நிறைய நல்ல கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். அதற்கு OTT தளங்கள் தான் எனக்கு பரவலான கற்பனை சுதந்திரத்துடன் அதை செய்யும் வாய்ப்பளிக்கிறது. "ட்ரைபல் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட்" என்ற இந்த நிறுவனம் இப்போதைக்கு வெப் சீரீஸ், டிஜிட்டல் ஒரிஜினல்ஸ் மற்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்தும். தெலுங்கில் உருவான என்னுடைய முதல் தயாரிப்பான "High Priestess" என்ற வெப் சீரீஸ் மிகச்சிறப்பாக வந்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி அற்புதமாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை. அமலா மேடம் போன்ற ஒரு மாபெரும் கலைஞர் இதில் நடிப்பது ஒரு உண்மையான பேரின்பம் மற்றும் ஆசீர்வாதம். குறிப்பாக, இதனை நாகார்ஜூனா சார் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய அளவிற்கு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த பேனர் மூலம் OTT தளத்துக்கு பல நல்ல உள்ளடக்கங்களை உருவாக்குவதே எனது உடனடி இலட்சியமாகும், அடுத்த தயாரிப்பு தமிழில் இருக்கும்.” என்றார்.

கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ZEE5 வலைத்தளத்தில் ஒளிபரப்பாகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...