மகேந்திரன் ஹீரோவாகவும், சுப்ரஜா ஹீரோயினாகவும் நடிக்கும் படம் ‘நாடோடி கனவு’. ஆர்.ஆர்.ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் கிரேன் மனோகர், விஜய் கணேஷ், கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
சபேஷ் முரளி இசையமைத்துள்ள இப்படத்தை வீர செல்வா இயக்குகிறார். ஜிஜு ஒளிப்பதிவு செய்ய, ராகுல் இணை தயாரிப்பை கவனிக்கிறார். சீர்காழி சிற்பி, அண்ணாமலை ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
தவறு செய்தவர்களுக்கு தண்டனையாக ஊரை விட்டே ஒதுக்கி வைப்பது தான் கிராம பஞ்சாயத்தின் வழக்கம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் பல படங்கள் இதை தான் வழக்கமாக கொண்டுள்ளது. இது தவறு செய்தவர்களுக்கு மட்டுமல்லாமல் காதலித்தாலும் இதே தண்டனை தான். ஆனால், இந்த படத்தில், காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்கிறார்கள். எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது, என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் இப்படத்தில் சொலியிருக்கிறார்கள்.
இப்படத்தில் இடம்பெறும் “கருத்த மச்சான்...” என்ற பாடல் படப்பிடிப்பின் போது மெய்மறந்து ஆடிக்கொண்டிருந்த நாயகி சுப்ரஜாவை விஷப்பூச்சி ஒன்று கடித்துவிட, அவரது உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டுவிட்டதாம். அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து திரும்பிய சுப்ரஜா, ஓய்வு எடுக்காமல், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் இம்மாதம் (செப்டம்பர்) திரைக்கு வர உள்ளது.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...