பாலிவுட் படத்தில் நடிக்க ஓகே சொன்ன அஜித்!
Wednesday April-10 2019

‘விஸ்வாசம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்தி படமான ‘பிங்க்’ ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்க, அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் போனி கபூர் தயாரிக்கிறார்.

 

தற்போது, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், அஜித்தின் நடிப்பு குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வியந்து பாராட்டியுள்ளார்.

 

’நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரஷ் காட்சிகளை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர், தனது சமூக வலைதள பக்கத்தில், “அஜித்தின் நடிப்பு அபாரம், விரைவில் அஜித் இந்தி படத்தில் நடிப்பதாக என்னிடம் தெரிவித்திருக்கிறார். அவருக்கு மூன்று ஆக்‌ஷன் கதைகள் இருக்கிறது. ஆனால், ”மூன்று கதைகளிலும் தன்னால் நடிக்க முடியவில்லை என்றாலும், ஒரு இந்தி படத்திலாவது விரைவில் நடிப்பேன்.” என்று அஜித்தின் கூறியதாக, தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.

Related News

4563

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery