Latest News :

’அறம்’ படத்தால் நயந்தாராவுக்கு வந்த ஜுரம்!
Wednesday September-06 2017

ரஜினி கூட நடிச்சாலும் சரி, பீல்ட் அவுட் ஆன ராமராஜன் கூட நடிச்சாலும் சரி, படத்தின் புரொமோஷனுக்கு வர மாட்டேன், என்பது தான் நயந்தராவின் பாலிசி. தற்போது அந்த பாலிசியை ‘அறம்’ படத்திற்காக மாற்றிக் கொண்டு படத்தின் புரோமோஷன் வேலைகளில் படி தீவிரம் காட்டி வருகிறார்.

 

நயனின் இந்த பாலிசி மாற்றதிற்கான காரணம் என்னவென்றால், ‘அறம்’ படத்தை தனது மேனஜர் பெயரில் அவர் தான் தயாரித்திருக்கிறாராம். படத்தை வெளியிட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த நயந்தாரா, தற்போது புரோமோஷன் வேலைகளில் இறங்கியும் படத்தின் சிறை வாசம் மட்டும் முடியவில்லையாம்.

 

இதற்கிடையே தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் ‘அறம்’ படத்டை நயன் சமீபத்தில் போட்டுக்காட்டினாராம். ஆஸ்கார் விருது கமிட்டையைவிடவும் உண்ணிப்பாக படத்தை பார்த்த விக்னேஷ் சிவன், படத்தில் ஒன்றுமே இல்ல, இப்படியே ரிலீஸ் செய்தால் போஸ்டர் ஒட்டிய காசு கூட தேராது, என்று பட்டென்று சொல்லியதோடு, தனது ஐடியாக்கள் சிலவற்றை சொல்லி, சில காட்சிகளை மீண்டும் சூட் செய்யவும் பரிந்துரைத்துள்ளாராம்.

 

காதலரின் ஐடியாவை காட்சியாக்க நயந்தாரா சம்மதித்தாலும், அதன் மூலம் நடைபெற உள்ள ரீ சூட்டுக்கான செலவுகளால் நயந்தாராவுக்கு ஜுரம் வந்துவிட்டதாம். இருந்தாலும், இந்த படத்தை எப்படியாவது லாபகரமான பொருளாக சந்தையில் விற்றுவிட வேண்டும் என்பதில் மட்டும் நயம் தீவிரமாக இருக்கிறாராம்.

Related News

457

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery