கடந்த சில காலங்களாக சமூக வலைதளம் மூலம் பாப்புலாரிட்டியை தேடிக் கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது மக்களை கடுப்பேற்றும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும், பொது நிகழ்ச்சிகளில் தொகுப்பாளி பணியை செய்பவர், அங்கேயும் தனது பேச்சால், கொள்ளோ கொள்ளு என்று கொள்ளுகிறார்.
இதற்கிடையே, கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவித்தவர், அதற்கு எடுத்துக் காட்டாக, “எம்.ஜி.ஆர் நடிகை லதாவை தடவுவதை விட அதிகமாக தடவுகிறார்களே” என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு நடிகை லதா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, அதிலும், தனது கருத்தில் தவறு ஒன்றும் இல்லை, என்பது போல பதிவிட்டு, தனது திமிர் தனத்தை மீண்டும் காட்டியிருக்கிறார்.
இதோ அவரது பதில்,
MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது?இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.
— Kasturi Shankar (@KasthuriShankar) April 10, 2019
read full thread...https://t.co/QtLHXhg4Mi
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...