சம்பளத்தை பல கோடிகளாக வாரி வாரி கொடுக்க பல தயாரிப்பு நிறுவனங்கள் வரிசைக்கட்டி நின்றாலும், கதைக்கும், இயக்குநர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘புரியாத புதிர்’ தோல்வியடைந்ததால், இனி அதுபோன்ற கதை அவருக்கு செட்டாகது என்ற மனநிலைக்கு பல இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள்.
‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு கதை சொல்ல வருபவர்கள் அனைவரும் அவரை மாஸ் ஹீரோவாக காட்டுவதிலே குறியாக இருக்க, இது அடிதளத்திற்கே ஆபத்தாகிவிடுமோ! என்ற அச்சம் லேசாக விஜய் சேதுபதிக்கும் ஏற்பட்டிருக்கிறதாம். இருந்தாலும், சில நம்பிக்கைக்குரிய இயக்குநர்கள் என்றால் மாஸ் படம் மட்டுமல்ல மசாலா படங்களிலும் இனி நடிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குநர் கோகுலுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்திருக்கும் ‘ஜுங்கா’ படமும் அப்படியான ஒரு மசாலா மாஸ் ஹீரோ படம் தானாம். அதிலும் இப்படத்தின் கதை தமிழகம் மட்டும் இன்றி பிரான்ஸிலும் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருப்பதால், படத்தின் பட்ஜெட் ரொம்ப பெருசு என்பதால் இந்த படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கிறார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி தயாரிக்கும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமத்தை சில பெரிய நிறுவனங்கள் வாங்க முயற்சிக்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், ரஜினிகாந்தை வைத்து ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஒருவரது கதையை தேர்வு செய்துள்ள லைகா, தற்போது விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை விஜய் சேதுபதி நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாக ‘ஜுங்கா’ இருக்க, லைகா நிறுவனத்தின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஓகே சொன்னால், ‘ஜுங்கா’ வை காட்டிலும் பிரம்மாண்டமான படமாக அப்படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...