நாடளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நேற்று 20 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் மக்களுக்கு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், நடிகர், நடிகைகளை வைத்து வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு வீடியோக்களையும் தேர்தால் ஆணையம் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
இப்படி வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் நடிகர், நடிகைகள் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் சிலரால் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாது.
ஆம், அந்த பட்டியலில் பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தில் மிரட்டிய பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரால் வாக்களிக்க முடியாது. காரணம், அவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவர் ஆவார். இதற்காக அவர் இந்திய குடியுரிமையை துறந்துவிட்டார். இந்தியா இரட்டை குடியுரிமையை அனுமதிப்பதில்லை என்பதால், அக்ஷய் குமாருக்கு இந்தியாவில் வாக்குரிமை கிடையாது.

இப்படி குடியுரிமை காரணமாக இந்தியாவில் வாக்களிக்க முடியாமல் இருக்கும் நடிகர், நடிகைகள் பட்டியல் இதோ,
1. அக்ஷய் குமார் - கனடா நாட்டு குடியுரிமை
2. அலியா பட் - பிரிட்டன் குடியுரிமை (அம்மா பிரிட்டன்)
3. தீபிகா படுகோன் - டென்மார்க் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.
4. கத்ரினா கைப் - பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.
5. இம்ரான் கான் - அமெரிக்க குடியுரிமை வைத்துளளார்.
6. சன்னி லியோனி - கனடா குடியுரிமை

இந்த முக்கியமான திரை நட்சத்திரங்களுடன், பெயர் குறிப்பிடாத பல பிரபலங்கள் இதுபோல வெளிநாட்டு குடியுறிமையை பெற்றுக் கொண்டு இந்திய குடியுரிமையை துறந்ததால், அவர்களால் வாக்களிக்க முடியாது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...