நடிகர், நடிகைகள் சிலர் தங்களது அப்பா, அம்மா உள்ளிட்ட குடும்பத்தாரை சரியாக கவனிப்பதில்லை என்ற புகார்கள் அவ்வபோது எழும். சமீபத்தில் கூட, நடிகர் நாசர், தனது அப்பாவை கவனிப்பதில்லை என்றும், அதற்கு காரணம் அவரது மனைவி கமிலா தான் என்றும், நாசரின் சகோதரர் குற்றம் சாட்டினார்.
மேலும், இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கமிலாவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக விளக்கம் அளித்த நாசர், விரைவில் இது குறித்து விரிவாக பேசுவேன், என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சங்கீதா, தனது அம்மாவை வீட்டை விட்டு துறத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வந்த சங்கீதாவுக்கு ‘பிதாமகன்’ படம் நல்ல பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், பின்னணி பாடகர் கிரீஷை திருமணம் செய்துக் கொண்டார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சங்கீதாவின் தாய் பானுமதி தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், வயதான என்னை வெளியேற்றிவிட்டு நான் வசித்து வரும் வீட்டை சங்கீதா அபகரிக்க முயல்கிறார், என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், நடிகை சங்கீதாவை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவருடன் ஆணையத்தில் சங்கீதா ஆஜரானார்.
மேலும், இது தொடர்பாக சங்கீதா அளித்த விளக்கத்தில், சம்மந்தப்பட்ட வீடு தனது பெயரில் இருப்பதாகவும், அந்த வீட்டை தனது அண்ணன், தம்பி அபகரிக்க முயல்வதாகவும், அதற்கு தனது அம்மாவும் உடந்தையாக இருப்பதால் தான் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக, தெரிவித்துள்ளார்.
என்னதான் பிரச்சினையாக இருந்தாலும், இந்த வயதில் அம்மாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னால், அவங்க எங்க போவாங்க என்று யோசிக்காமல் சங்கீதா செய்திருக்கும் இந்த செயலுக்கு திரையுலகினரும் பெரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...