‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் மணிரத்னம் தீவிரம் காட்டி வருகிறார். இதில், கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்றுக்கு மணிரத்னம் கதை, வசனம் எழுத, அப்படத்தை அவரிடம் உதவியாளராக இருந்த தனா என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
கதை, வசனத்தை மணிரத்னமும், தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரீத்தா ஒளிப்பதிவு செய்கிறார். அமரன் கலையை நிர்மாணிக்க, ஏகா லகானி ஆடை வடிவமைப்பு பணியை செய்து வருகிறார்.
’வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...