இளம் வயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக் உயர்ந்துள்ளார். சிறிய வேடம் என்றாலும், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வந்த இவரது ‘கனா’ பெற்ற மிகப்பெரிய வெற்றியால், அவரது சினிமா கனாவும் நிறைவேறியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் கனவு தற்போது நிறைவேறும் வேலை வந்துவிட்டது. தற்போது சிவகார்த்திகேயனுடனும், விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருவதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வருகின்றனவாம்.
இப்படி ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர், திடீரென்று முன்னணி ஹீரோ ஒருவருக்கு தங்கையாக நடிக்க ஓகே சொல்லி, கோலிவுட்டுக்கு அதிர்ச்சியளித்திருக்கிறார்.
மணிரத்னம் கதை, வசனம் எழுத, தனா திரைக்கதை எழுதி இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடிக்கிறார். அவருக்கு அண்ணனாகவும், ஹீரோவாகவும் விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார்.
தொடர் ஹிட் படங்கள் கொடுத்து, தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கியிருக்கும் நேரத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் இப்படி தங்கை வேடத்தில் நடிக்கிறார், என்று மொத்த கோலிவுட்டே ஷாக்கானாலும், ஹீரோயினோ, தங்கையோ நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்றால், நான் நடிக்க ரெடி, என்று எப்போதும் போல ஐஸ்வர்யா ராஜேஷ், கூறியிருக்கிறார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...