Latest News :

விசாகனை திருமணம் செய்தது ஏன்? - மனம் திறந்த செளந்தர்யா ரஜினிகாந்த்
Friday April-12 2019

ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா, அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். அஸ்வின் உடனடியாக இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், செளந்தர்யாவோ, அவரது குழந்தை வேத் தான், இனி என் உலக், என்று கூறினார்.

 

இதற்கிடையே, செளந்தர்யாவுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகனான விசாகன் என்பவரை அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டார். செளந்தர்யா - விசாகன் திருமணம் படு விமர்சியாக நடைபெற்றது.

 

திருமணத்திற்கு பிறகு ஹனீ மூன் சென்று வந்த செளந்தர்யா - விசாகன், தற்போது தங்களது குழந்தை வேத் உடன் சந்தோஷமாக இருப்பதோடு, அவ்வபோது தங்களது சந்தோஷ தருணத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

 

இந்த நிலையில், விசாகனை திருமணம் செய்துக் கொண்டது குறித்து செளந்தர்யா, முதல் முறையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர், வார இதழ் ஒன்றின் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், “விசாகனை முதலில் சந்தித்த போது அவருடன் ஒரு மணி நேரம் பேசினேன், அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது, அவர் எனக்கு பொருத்தமானவர் என்று. அதுமட்டும் இல்லாமல், நினைத்ததை நினைத்தபடி நேரடியாக பேசும் ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவராக இருக்கிறார். எதை சொல்ல வேண்டும், எதை மறைக்க வேண்டும், என்ற எதுவும் தெரியாமல் வெளிப்படையான மனிதராக இருந்ததால் தான், அவரை திருமணம் செய்ய முடிவு செய்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

4587

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

’45’ படம் தனி உலகம்! – நடிகர் சிவராஜ்குமார் கூறிய சுவாரஸ்ய தகவல்
Monday December-22 2025

சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...

பிரபல ஆபரண நிறுவனத்தின் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான்!
Monday December-22 2025

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...

Recent Gallery