‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சதா, இரண்டாவது வாய்ப்பாக ஷங்கரின் ‘அந்நியன்’ பட வாய்ப்பை பெற்றவர், கோடம்பாக்கத்தின் அடுத்த கனவுகண்ணியாகிவிடுவார் என்று கோடம்பாக்கமே எதிர்ப்பார்க்க, அம்மணி நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடாததால் வாய்ப்பில்லாத நடிகைகளின் லிஸ்டில் சேர்ந்துவிட்டார்.
தமிழில் வாய்ப்பில்லை என்றலுதும், தெலுங்கு, கன்னடம் என்று போனவருக்கு அங்கேயும் வாய்ப்புகள் சரியாக அமையாததால், தற்போது பாலிவுட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே, ஆர்.கே, வடிவேலு ஆகியோருடன் ஜோடி போட்ட சதா, கடைசியாக ‘எலி’ படத்தில் நடித்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
‘டார்ச்லைட்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய மஜீத் இயக்குகிறார். இதில் விலை மாது கதாபாத்திரத்தில் சதா நடிக்கிறார். ஏழ்மையான பெண் ஒருவர் எப்படி விலை மாதுவாகிறார், என்பது குறித்து இயக்குநர் சொல்லியிருக்கும் விதமும், அந்த காட்சிகளும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் விதத்தில் சிறப்பாக வந்துள்ளதாம்.
1980 ஆண்டுகளில் நடக்கும் கதையான இப்படத்தில், அந்த காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, அப்போதைய லைட்களையும் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...