பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலர் தற்போது சினிமாவில் ஹீரோயின்களாக வெற்றிப் பெற்று வரும் நிலையில், தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2-வில் கலக்கிய பானு ஸ்ரீ, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஜெய் ஹீரோவாக நடிக்கும் ’பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பானு ஸ்ரீ, தனது முதல் தமிழ்ப் பட அனுபவத்தை கூறுகையில், “இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால அதில் அடுக்குகள் இருக்கும். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்.
பிரேக்கிங் நியூஸ் சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்ஷன் படம். இது வெறுமனே கிராஃபிக்ஸ் வைத்து உருவாகும் படம் அல்ல, நல்ல எமோஷனை உள்ளடக்கிய படம், நல்ல கருத்துக்களையும் கொண்டுள்ளது.
ஜெய் மிகவும் எளிமையாக இருக்கிறார். உடன் நடிப்பவர்களுக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறார். இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் தெளிவான ஒரு மனிதர். கதையில் என்ன சொன்னாரோ அதை எடுக்கிறார்.” என்றார்.
ஏற்கனவே இப்படத்தில் தனது 15 நாட்கள் கால்ஷீட்டை முடித்துவிட்ட பானு ஸ்ரீ, தற்போது சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள உள்ளார்.
ஜானிலால் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார்.நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கும் இந்த படத்தில் உலக அளவில் 450CG தொழில்நுட்ப வல்லுனர்கள் வி.தினேஷ்குமார் மேற்பார்வையில் Vfx பணிகளை செய்து வருகிறார்கள். படத்தில் 90 நிமிடம் அளவிலான CG காட்சிகள் இருக்கின்றன.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...