தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தனது பட்டப்பெயருக்கு ஏற்றது போல, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். தற்போது அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கவும் தொடங்கி விட்டார்.
அந்த வரிசையில், ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் நயன்தாரா, தான் ஹீரோயின் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதேபோல் போலீஸ் அதிகாரியான ரஜினியின் மனைவியாக நயன்தாரா நடிப்பதகாவும், தகவல் கசிந்தது.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவலால் ஒட்டு மொத்த நயனின் ரசிகர்களும் பெரும் உற்சாகமடைந்து விடுவார்கள். அந்த அளவுக்கு ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நயன்தாராவின் வேடம் அமைந்திருக்கிறதாம்.

ஆம், படத்தில் வில்லியே நயன்தாரா தானாம். அப்பா - மகள் செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் ‘தர்பார்’ ரில் நயன் தான் வில்லியாம், அவரை எதிர்த்து தான் சூப்பர் ஸ்டாரே தர்பாரை நடத்துகிறாராம். அத்துடன், இதில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...