கேரளாவை சேர்ந்தவரான லட்சுமி மேனன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் ஆனதால் லக்கி நடிகை என்று பெயர் எடுத்தவர், ‘கொம்பன்’, ‘பாண்டியநாடு’, ‘மிருதன்’ என்று தொடர் வெற்றிப் படங்களாகவே கொடுத்து வந்தார்.
இதற்கிடையே உடல் அடை அதிகரித்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதையடுத்து உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்ட லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவாவுடன் ‘யங் மங் சங்’ என்ற படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அப்படமும் வெளியாவதில் காலதாமதம் ஆகி வருகிறது.
பட வாய்ப்புகள் இல்லாததால், படிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் லட்சுமி மேனன், குச்சிப்புடி நடனத்திற்கு டிப்ளமோ படித்து வருவதோடு, சோஷியாலஜி டிகிரியும் படித்து வருகிறாராம்.
என்ன தான் படிப்பு மீது கவனம் செலுத்தினாலும், தற்போது சினிமா மீது பெரும் ஆர்வத்தில் இருக்கும் லட்சுமி மேனன், மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரியாவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியே இருக்கிறாராம்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...