Latest News :

புதுமுக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘தோல் கொடு தோழா’
Monday April-15 2019

’ரோஜா மாளிகை’ படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு ’தோள் கொடு தோழா’ என்று தலைப்பு வைத்திருக்கிறது. இதில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக மும்பையை சேரெந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஹரி, ராகுல், பிரேம் ஆகிய மூன்று அறிமுக நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டான நேற்று பூஜையுடன் செனையில் நடைபெற்றது. இதில், கலைப்புலி எஸ்.தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.

 

Thol Kodu Thozha Movie

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கெளதம் படம் குறித்து கூறுகையில், “படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது, அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா. இப்படம் தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமாக இருக்கும்.” என்றார்.

 

கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியோ பீட்டர் இசையமைக்கிறார். எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்ய, செந்தில் கலையை நிர்மாணிக்கிறார். அசோக்ராஜா நடனம் அமைக்க, தளபதி தினேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். விவேகா, சுந்தர் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். பி.மனோகரன் தயரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

 

Thol Kodu Thozha

 

வரும் மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் ஆகிய இடங்களில் படமாக்க உள்ளார்கள்.

Related News

4608

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது
Monday August-18 2025

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

Recent Gallery