தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ், ரஜினியை வைத்து இயக்கிய ‘பேட்ட’ படம் ரிலீஸான அதே நாளில், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் ரிலீஸானது. இரு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக பெரும் வெற்றியும் பெற்றது.
அதே சமயம், இரு படங்கள் வெளியாகும் போதும், அஜித்தை கலாய்ப்பது போல, பேட்ட படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அஜித் ரசிகர்களும், ரஜினியை கலாய்த்து மீம்ஸ்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்களையும் பதிவிட்டனர். மேலும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையும், அவரது ட்வீட்டையும் அஜித் ரசிகர்கள் வறுத்தெடுத்தார்கள். ஒரு வழியாக இரு தரப்பினருக்கும் இடையிலான சமூக வலைதளப் போர் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்ட கார்த்திக் சுப்புராஜை, அஜித் ரசிகர்கள் மீண்டும் வறுத்தெடுக்க தொடங்கி விட்டார்கள்.
அதாவது, நேற்று சன் தொலைக்காட்சியில் ரஜினியின் ‘பேட்ட’ படம் ஒளிபரப்பானது. அதேபோல், ஐபில் கிரிக்கெட் தொடரில் சென்னை - கொல்கத்தா இடையிலான லீக் போட்டியும் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை அணி வெற்றி பெற்றது.
இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “தலைவர் மற்றும் தல ஆட்டம் ஒரே நேரத்தில் தொலைக்காட்சிகளில் நடந்து வருகிறது. தலைவர் மற்றும் தல டோனி ஆகிய இருவரும் என்றென்றும் மறக்க முடியாதவர்கள்.” என்று தெரிவித்தார்.
இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள், தல என்றால் அது அஜித் மட்டும் தான், அந்த பட்டப் பெயருக்கு பொருத்தமானவரும் அவர் மட்டுமே, என்ற ரீதியில் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டுக்கு கமெண்ட் தெரிவித்ததோடுல், அவரை வறுத்தெடுக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் தான், இந்த ட்வீட்ட போட்டோமோ, என்று கார்த்திக் சுப்புராஜே பீல் பண்ணும் அளவுக்கு அஜித் ரசிகர்களின் அட்டாக் இருந்தது. அதே சமயம், சில நாகரீகமான அஜித் ரசிகர்கள், கார்த்திக் சுப்புராஜின் ட்வீட்டுக்கு வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.
Thalaivar and Thala ஆட்டம் playing in our televisions at the same time 😊#Thalaivar & #ThalaDhoni legends forever 🙏#PettaOnSunTv #Petta #CSKvKKR #WhistlePodu
— karthik subbaraj (@karthiksubbaraj) April 14, 2019
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...