Latest News :

”இயக்குநர் கீராவிடம் பா.ரஞ்சித்தைப் பார்க்கிறேன்” - ‘பற’ பட விழாவில் சமுத்திரக்கனி பேச்சு
Tuesday April-16 2019

தரமான படங்களிலும், அழுத்தமான கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனில், நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘பற’. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால், ராமச்சந்திரன் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். 

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜான், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசுகையில், “இந்த படத்தில் நான் நடிக்க காரணம் பா.ரஞ்சித் தான். அவர் தான் கீராவை எனக்கு அறிமுகப்படுத்தினார். கீரா காதலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கதாபாத்திரம் என்று சொன்னார். அதைத்தானே நான் செய்துக் கொண்டிருக்கிறேன், என்றேன். இயக்குநர் கீராவிடம் நான் பா.ரஞ்சித்தை பார்க்கிறேன். எந்த உணர்ச்சியையும் அதிகமாக வெளிக்காட்டாத உண்மையாளர் ரஞ்சித். அதே கேரக்டர் தான் இயக்குநர் கீராவும். இந்த படத்தின் தயாரிப்பாளர் நல்ல நட்புள்ளம் கொண்டர். இந்தப் படம் அற்புதமான படம், அருமையான பதிவு.” என்றார்.

 

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “இந்த கூட்டத்தை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். இந்த ‘பற’ படத்தில் ஆக்ட் பற்றி டிரைலரில் சொல்லி இருக்கிறார். அது இன்றைய சமகாலப் பிரச்சினை. சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றிப் பெற வேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக் கூடாது.” என்றார்.

 

Para

 

தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது, “இந்தப்படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப்படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பைக் கொடுத்தார். இந்தப் படத்திற்கான ஆதரவை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.” என்றார்

 

படத்தின் ஒரு நாயகனான நித்திஷ் வீரா பேசியதாவது, “இந்தப்படத்தைத் தொடங்கியது இயக்குநர் பா. ரஞ்சித் அண்ணன் தான். அவர் இந்த விழாவிற்கு வந்ததற்கு நன்றி. இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக இருக்கும். இயக்குநர் கீரா அவர்களோடு பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அது நடந்துள்ளது.” என்றார்.

 

இயக்குநர் கீரா பேசுகையில், “இந்தப் படத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் இசை அமைப்பாளர் மறைந்து விட்டார். அவ்வளவு குறைவாகத் தான் வாழ்நாள் இருக்கிறது. வாழும் போது துரோகமும் வன்மும் இல்லாமல் வாழ வேண்டும். இந்தப்பற படம் ஏற்றத்தாழ்வையும், சாதி ஒழிப்பையும், ஆணவக்கொலைக்கான தீர்வையும் அண்ணன் சமுத்திரக்கனி ஏற்றுக் நடித்திருக்கும் அம்பேத்கர் கேரக்டர் மூலமாகச் சொல்லி இருக்கிறோம். இந்தப்படம் தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோகன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சிபின் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜார்ஜ் வி.ஜாய் இசையமைத்திருக்கிறார். உமா தேவி மற்றும் சினேகன் பாடல்கள் எழுத, சாபு ஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். மகேஷ் கலையை நிர்மாணித்திருக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை சிவசங்கர் கவனிக்க, இணை தயாரிப்பை எஸ்.பி.முகிலன் கவனிக்கிறார்.

Related News

4613

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது
Monday August-18 2025

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...

தனஞ்செயன் வெளியிடும் ‘கடுக்கா’! - கவனம் ஈர்க்கும் டிரைலர்
Sunday August-17 2025

சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...

திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன - நடிகர் ஏ.எல்.உதயா உருக்கம்
Saturday August-16 2025

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...

Recent Gallery