நடிகை சங்கீதா, தற்போது விஜய் ஆண்டனியின் ‘தமிழரசு’ படத்தில் வில்லியாக நடித்து வரும் நிலையில், நிஜத்திலும் அவர் ஒரு வில்லிதான், என்பது போலா அவரது அம்மாவே அவர் மீது பல புகார்களை கூறி வருகிறார்.
சமீபத்தில், சங்கீதா தனது அம்மாவை வீட்டை விட்டு துரத்தியதால், அவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த சங்கீதா, இந்த விவகாரம் குறித்து பேசுகையில், 13 வயதில் இருந்தே தனது அம்மா தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், சினிமாவில் ஒரு நடிகையாக இருப்பது எவ்வளவு கஷ்ட்டம் என்பது அனைவருக்கும் தெரியும், அந்த கஷ்ட்டத்தை நான் சிறுமியாக இருக்கும் போதே அனுபவித்த வந்தேன், என்றவர், தனது சம்பாத்யத்தில் தனது சகோதரர்கள் வாழ்ந்து வருவதாகவும், குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், சங்கீதா மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ள அவரது அம்மா, ஏன் அவர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்பதற்கான காரணத்தையும் தற்போது தெரிவித்துள்ளார்.
அப்பாவை இழந்த சங்கீதாவை படிக்க வைத்து ஆளாக்கிய அவரது அம்மா, அவரது சம்மதம் இல்லாமல் எந்த படத்தையும் ஒத்துக்கொண்டதில்லையாம். அதேபோ, பெண் குழந்தை என்ற ஆசையில் அவரது வீட்டை சங்கீதா பெயரில் எழுதி வைத்தாராம். ஆனால், தற்போது அந்த வீட்டையே சங்கீதா அபகரிக்கப் பார்க்கிறாராம்.
எல்லாத்துக்கும் காரணம் பணம் ஆசை, உலகமே அதை சுற்றித்தானே இயங்குகிறது. ஒரே வீட்டில் அம்மா, பெண் இருக்கிறோம் என்று தான் பெயர். ஆனால், நாங்கள் பேசி பல வருடங்கள் ஆகிறது, என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும், என்று தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...