சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் விதமாக உருவாகியிருக்கும் ‘காபி’
Tuesday April-16 2019

நமக்கு தெரியாமலேயே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் விதத்தில் உருவாகியிருக்கும் படம் ‘காபி’. ஓம் சினி வென்ச்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படத்தில் ராகுல் தேவ், இனியா, முக்த கோட்சே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்து விடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போது, பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். எல்லாம் கஷ்டங்களும் தீர்ந்தது, இனி சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழலாம் எனும் போது, சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அவள் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்றாள் என்பதே இப்படத்தின் கதை.

 

மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இப்படம் நமக்கு தெரியாமலேயே நம்மை அச்சுறுத்தும் ஒரு சமூக விழிப்புணர்வு பற்றியும் பேசுகிறது.

 

வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மோகன் ராஜா பாடல்கள் எழுத, வெங்கட்நாத் இசையமைக்கிறார்.

Related News

4618

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery