காமெடி நடிகர் பாலாஜிக்கும், அவரது மனைவி நிதயாவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை, போலீஸ் வரை சென்றது. ஒருவருக்கொருவர் மாத்தி மாத்தி புகார் கூறி வந்த நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்ற பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும், அந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் இணைந்து வாழ தொடங்கியவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, மீண்டும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூற தொடங்கியுள்ளார்கள்.
இதை தொடர்ந்து, பாலஜியிடம் வாழ முடியாது, அவர் ஒரு சைக்கோ, என்று கூறி அவரை விட்டு பிரிந்து வாழும் நித்யா, தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளராக அவர் உள்ளார்.
இந்த நிலையில், வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய பெண்கள் கட்சி சார்பில் நித்யா போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் இல்லை, டெல்லியில்.
முதலில் காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட தான் நிதயா முடிவு செய்திருந்தாராம். ஆனால், தமிழ்நாட்டில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், அங்கே வந்து தன்னைப் பற்றி அவதூறு பரப்பணும் என்று பாலாஜி திட்டம் போட்டிருந்ததால், அவருக்கு பயந்து நித்யா, டெல்லியில் போட்டியிடுகிறாராம்.
ஆக, விரைவில் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற இருக்கும் நித்யா, டெல்லியில் தங்கி தனது தேர்தல் வேலைகளை கவனிக்க உள்ளார்.
ஏற்கனவே, நடிகர் பாலாஜி, மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...