தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக், சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அப்படி அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வெள்ளைப்பூக்கள்’ வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக விவேக் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் நடிகர் விவேக் நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு, மூடப்பட்ட அணு உலை ஒன்றில் நடைபெற்றிருக்கிறது. குற்றவாளியை பின் தொடர்ந்து செல்லும் விவேக், அணு உலை மீது ஏரியுள்ளார். அதை படமாக்க ஒரு டிரோன் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
500 அடி உயரத்தை தாண்டியதும் மொபைல் சிக்னல் கிடைக்காமல் போயுள்ளது. இதனால், படக்குழுவுடன் தொடர்பு கொள்ள முடியாத சமயத்தில், டிரோன் திடீரென்று பழுதாகி, அது விவேக்கை நோக்கி விழுந்து நொருங்கியதாம். அவர் சற்று நகராமல் இருந்திருந்தால் அந்த விபத்தில் சிக்கியிருப்பாராம். ஆனால், பாதுகாப்புக்கு அங்கு இருந்தவர் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...